விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Photo of author

By Hasini

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 63 வயதான இவர் ஒரு விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லலிதா மற்றும் மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற 8 வயது மகன் உள்ளான்.

மருமகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் காரணமாக புதிய காரை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். விவசாயி ஈஸ்வரன் புதிய கார் என்பதால் அதை ஒட்டி பார்க்க ஆசைப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பேரனை அழைத்துக்கொண்டு அந்த காரை இயக்கி உள்ளார். அந்த காரானது ஆட்டோமேட்டிக் கியர் வசதி கொண்டது என்பதன் காரணமாக, எதிர்பாராத விதமாக  திடீரென்று பின்னால் செல்வதற்கு கியர் விழுந்துள்ளது.

ஆனால் விவசாயியோ இதை அறியாமல் காரை இயக்கியதன் காரணமாக அந்த வாகனம் பின்னோக்கி வேகமாக சென்றது. அதை தொடர்ந்து அங்கு இருந்த நாற்பதடி கிணற்றுக்குள் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பாய்ந்து விட்டது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. ஏதோ சத்தம் கேட்கிறது என்று வீட்டில் உள்ளோர் நினைத்தனர் எனவே அந்த சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

அப்போது காருக்குள் இருந்த இரண்டு பேரும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது தெரிந்தது. அதன் காரணமாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக அந்த நிலையை அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் கயிறு மூலம் தீ அணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி காருக்குள் இருந்த ஈஸ்வரன் மற்றும் அவரது பேரனான நகுல் கிருஷ்ணன் ஆகியோரை மீட்டனர்.

விவசாயி மயங்கிய நிலையில் இருந்ததால், தீயணைப்பு துறையினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அது எந்த பயனும் அளிக்கவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் நகுல் கிருஷ்ணனோ லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டான். இதன் காரணமாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் இருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விரைந்து வந்து அந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இறந்த ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்து குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது ஈஸ்வரனின் உடலில் எங்குமே காயம் இல்லை.

அவர் ஸ்டியரிங்கில் நெஞ்சுப் பகுதி மட்டும் பயங்கரமாக மோதி உள்ளதன் காரணமாக இறந்திருக்கலாம் என்றும் தகவல் தெரிவித்தனர். மேலும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததன் காரணமாக நகுல் கிருஷ்ணன் ஏர் பலூன் வெளியாகி அதன் காரணமாக உயிர் தப்பியுள்ளார் என்றும் தகவல் தெரிவித்தனர்.