விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்!
ஒருவருக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று இருக்கும்போது யாரும் தடுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது.எதோ ஒரு வகையில் மரணம் அந்த நபரை தழுவுகிறது.
அந்த வகையில் தற்போது திருவெற்றியூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்.இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ராகுல்(15) என்ற மகன் உள்ளான்.ராகுல் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் +1 படித்து வருகிறான்.
இந்நிலையில் லாக்டவுன் காலத்தில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது பந்து எதிர்பாராத விதமாக அருகே உள்ள இரயில் தண்டவாளத்தில் விழுந்தது.அதை எடுக்க சென்ற ராகுல் கொரோனா காலகட்டத்தில் குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்படுவதால், ராகுல் கவனக்குறைவாக பந்தை இரயில் தண்டவாளத்தில் இருந்து எடுத்துள்ளான்.
அந்த நேரம் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் இரயில் ராகுல் மீது மோதியதில் படுகாயம் அடைந்தான்.மேலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த கோருக்குபேட்டை ரயில்வே போலீசார், பலியான மாணவன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..மேலும் இரத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.