பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்! தமிழக அரசை வலியுறுத்திய ராமதாஸ்!

0
98

சென்னையில் சென்ற 12ஆம் தேதி தொற்று பாதிப்பு 1564 ஆக இருந்தது தற்போது அந்த நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. சென்ற நான்கு தினங்களில் மட்டும் சென்னையில் நோய் தொற்று பாதிப்பு 1317 அளவிற்கு குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சென்னையிலும் தமிழகத்தின் அனைத்துப் பரிசோதனைகளையும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருந்தாலும் நாள்தோறும் தொற்று நோய்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. சென்னையில் நோய்த்தொற்று விகிதம் 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைந்து இருப்பது சற்றே நிம்மதி அளிக்கும் விதமாக இருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

அதோடு அவர் மேலும் தெரிவித்ததாவது, இதுபோன்ற சமயத்தில் தமிழக அரசு இந்த நோய்த் தடுப்புப் பணிகளை இன்னும் தீவிரப் படுத்துவதன் மூலமாக சென்னையில் இந்த நோய்த்தொற்றை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முதல் பணி சென்னையில் நோய்த்தொற்று சோதனைகளைஅதிகப்படுத்துவது தான் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

சென்னையில் சென்ற ஒரு சில வாரங்களாக நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. சென்னையில் சோதனை செய்யப்படாமல் நோய்த்தொற்று உடன் இருந்து வருவோரின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும் என்று தெரிவித்த அவர், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 1.8 நபர்களுக்கு இந்த நோய்த்தொற்றை பரப்பு செய்ததாக ஆய்வுகள் தெரிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்திருக்கும் ராமதாஸ், இந்த சூழ்நிலையில் அதிக எண்ணிக்கையில் சோதனைகளை செய்யும்போது நோயால் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் விரைவாக அடையாளம் கண்டு பிடித்து அவர்களை குணப்படுத்த இயலும் இதன்மூலம் அவர்கள் வழியாக மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தடுக்க இயலும். நாள்தோறும் பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் மிக அதிக அளவிலான சோதனைகளை மேற்கொண்டு அதன் மூலமாக தான் இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வெற்றிகரமாக கட்டுப்படுத்த இயன்றது அதன் பிறகு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் விளைவாக புதிய தொடர்கள் உண்டாகாமல் தடுக்க இயன்றது எனவும், தெரிவித்த அவர், அதே போல சென்னையிலும் அதன் பிறகு தமிழகத்தின் இன்னும் பிற மாவட்டங்களிலும் சோதனைகளை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதன் மூலமாக நோய்த்தொற்று விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசுக்கு தன்னுடைய வேண்டுகோளை வைத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்