நீர்வாழ் உயிர்களுக்கு நேரும் விபரீதங்கள் – நடக்கும் மர்மங்கள் என்ன?

Photo of author

By Parthipan K

நீர்வாழ் உயிர்களுக்கு நேரும் விபரீதங்கள் – நடக்கும் மர்மங்கள் என்ன?

Parthipan K

கடல்வாழ் உயிர்கள் சமீபகாலமாக காரணம் ஏதும் அறியா வண்ணம், கூட்டம் கூட்டமாக இறந்து கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான் லாராகெட் என்னும் ஆற்றில் அதிக அளவில் மீன்கள் இறந்து கிடந்தன. அதனைத் தொடர்ந்து இப்பொழுது இந்தோனேஷியாவில் திமிங்கலங்கள், காரணம் ஏதுமின்றி இறந்த கிடக்கின்றது.

மூன்று டன் மீன்கள் லாராகெட் ஆற்றில் இறந்து கிடந்தன. இதனை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கக்கூடும் என்று சந்தேகித்தார்கள். அதன் காரணமே இன்னும் அறியாமல் இருக்கும் நிலையில் இந்தோனேஷியாவில் 46 திமிங்கலங்கள் ஜாவா என்கின்ற தீவிலிருக்கும் மதுரா கடற்கரையின் கரையோரம் இறந்து கிடக்கின்றன.

மேலும் மூன்று திமிங்கலங்கள் உயிருக்கு போராடி இருந்துள்ளது. அங்கிருந்த மீனவர்கள் மற்றும் மக்கள் போராடி மூன்று திமிங்கலங்களை கடலுக்கு இழுத்து சென்று சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து நீரில் வாழும் உயிர்களுக்கு சோகங்கள் ஏற்படுகிறது. இதுபோன்று நீர்வாழ் உயிரினங்கள் தொடர்ந்து கொத்து கொத்தாக இறப்பதை காண்பது வேதனை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.