புதிய வழிகாட்டுதல் விதிப்படி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் கொரோனாவால் பலி – அதிர்ச்சியில் உறவினர்கள்

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு கொரோனா நோய்க்கான சிகிச்சை முறைக்கான வழிகாட்டுதலை அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறது. அப்படி சமீபத்தில் அரசு மாற்றியமைத்த விதிமுறை ஒருவர் உயிரை பறித்துள்ளது.

கடந்த 9ம் தேதி சென்னையைச் சேர்ந்த 54 வயது நபர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 54 வயது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதிய வழிகாட்டுதல் படி மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள் படாமலேயே அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்கு சென்ற மூன்று நாட்களில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கடந்த 21ம் தேதி அவரது குடும்பத்தார் கொண்டு சென்றுள்ளனர். ஆனால அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இறந்த பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசின் புதிய வழிகாட்டுதல் விதி கேள்விக்குரியதாகியுள்ளது.

Leave a Comment