ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

Photo of author

By Parthipan K

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு !!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று  பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன.

ஒருவர் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கூட அவருக்கும் இந்த ஒமைக்ரான் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக  கூறப்படுகிறது. இது ஒமிக்ரான் மட்டுமல்லாமல் உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக  மருத்துவ கல்லூரி பேராசிரியர் டேவிட் கூறும்போது ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களை குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் கவனம் செலுத்தி, வைரஸின் தொடர்ச்சியான பரிமாணத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தக்கூடிய ஆண்டிபாடிகளை கண்டிருப்பதால் இந்த வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கவும், ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கவும் வழி பிறக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.