ஈரோடு அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை! போராட்டம் தொடர்வதால் தூய்மை பணி பாதிப்பு!
ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் மொத்தம் 132 பேர் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தூய்மை ,காவல் ,நோயாளிகளை அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களுக்கு ஒருநாள் ஒரு நபருக்கு ரூ 707 வீதம் மாதம் ரூ 21 ஆயிரம் வழங்கப்படும்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் ஒரு நாளிற்கு ரூ 280 வீதம் மாதம் ரூ 8 ஆயிரம் மட்டும் தருகின்றது.
அதனால் அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள்.மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வார விடுமுறை மற்றும் ஓய்வு அறை போன்றவைகள் வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கை நிறைவேற்றப்படும் என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டம் கலைந்தது. இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அந்த பேச்சு வார்த்தை உடன்படவில்லை அதன் பிறகு அறிவித்தபடி ஊதியத்தை முறையாக வழங்கவேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி கையில் கறுப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால். போராட்டக்காரர்களுடன் ஒப்பந்த நிறுவனம் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன.