பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி!

Photo of author

By Hasini

பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் சைன் சிங் 43 வயதான இவர் தன்னை ஒரு பாதிரியார் என அடையாளப்படுத்திக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெப கூட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்ததன் காரணமாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்த போது மதகூட்டம் என்ற போர்வையில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவத்தன்று நித்திரவிளை போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு இரண்டு ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் 6 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அந்த நபர்களையும் வீட்டின் உரிமையாளர் சிங்கையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது பெண்கள் உடன் இருந்தவர்கள் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த சைன்மற்றும் சிபின் என்பவரும் என தெரிந்தது. மேலும் பிடிபட்ட நான்கு பெண்களில் இரண்டு பேர் 40 மற்றும் 55 வயது உடையவர்கள் என்பதும், மற்ற 2 பேரும் 19 நிறைவடைந்த பெண்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட பெண்களில் இரண்டு பேர் தாயும் மகளும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. வறுமையின் காரணமாக பெற்ற மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதபோதகர் அங்கிருந்த இரண்டு ஆண்களையும் மற்றும் 40,55 வயதுடைய இரண்டு பெண்களையும் சிறையில் அடைத்தனர்.

மீட்கப்பட்ட இளவயதுப் பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு கேரளாவில் இருந்தும் இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட செய்தது குறித்தும் விசாரித்து வருகின்றனர். அதில் 19 வயது பெண்ணின் தாயார் முன்பு காவல் நிலையத்தில் துப்புரவு வேலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது அந்த மதபோதகருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவரின் வீட்டை சர்ச் ஆக மாற்றி அவர் அடிக்கடி பிரார்த்தனை கூட்டங்களை நடத்தியுள்ளார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத சமயத்தில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்தும் வந்துள்ளார். கேரளாவில் இருந்தும் இளம்பெண்கள் இங்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். அதில் 19 வயது பெண்ணின் தாயார் முன்பு போலீஸ் நிலையத்தில் வேலை செய்ததாகவும், அந்த பெண்ணுக்கு ஒரு  போலீஸ்காரர் ஒருவர் உடன் திருமணம் பேசி முடித்த நிலையில், அந்தப் பெண்ணின் தவறான வழிகாட்டுதலால் அந்த தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் கூறினார்கள்.