வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!!

Photo of author

By Sakthi

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!!
வேலைகள் தேடுவதற்கு முக்கிய இணையதளமாக இருக்கும் லிங்கிடு இன்(LinkedIn) நிறுவனம் தற்போது அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் இருந்து பெருமளவில் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் நிலையில் லிங்கிடு இன் நிறுவனமும் இரண்டாவது முறை இந்த பட்டியலில் இணைந்துள்ளது. லிங்கிடு இன் இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கின்றது. இந்த இணைய தளத்தில் இருந்து தேவைப்படும் வேலைகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் வெளிநாடுகள் வேலை வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இதையடுத்து லிங்கிடு இன் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 700 ஊழியர்களை திடீரென்று வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின்  நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்து ஊழியர்களில் படிநிலையை குறைத்து வேகமாக முடிவுகளை எடுக்க முடியும் என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையில் லிங்கிடு இன் நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 20000 ஊழியர்கள் தற்போது பணிபுரியும் இந்த நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் சில பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.