மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

0
124
All students pass! Tamil Nadu Government Important Announcement!!
All students pass! Tamil Nadu Government Important Announcement!!

மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!! 

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்,  1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையில் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம்  வகுப்பு வரை தேர்வு எழுதிய அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் 9ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேர்ச்சி வழங்க அரசு விதிகளின் படி குறைந்தது 75% வருகைப்பதிவு இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. 75% வருகைப்பதிவு இருப்பின் தேர்ச்சி என அறிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K