மக்களே புதிய ரேஷன் கார்டு வாங்க போறீங்களா.. இதோ தமிழக அரசின் நியூ அப்டேட்!!

0
77
https://tamil.boldsky.com/relationship/signs-your-girlfriend-is-lying-to-you-in-tamil-056059.html
https://tamil.boldsky.com/relationship/signs-your-girlfriend-is-lying-to-you-in-tamil-056059.html

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கான அப்டேட் வெளியாகி உள்ளது. புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்பொழுது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

புதிய ரேஷன் காடுகளுக்கு விண்ணப்பம் இடுவோர் இரண்டு ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இதுவரை இந்த சான்றுகளை சமர்ப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் 100க்கும் மேற்பட்டது நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கார்டின் முக்கியத்துவம் என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ரேஷன் கார்டு உள்ளவர்கள் இலவச அரிசி குறைந்த விலையில் சர்க்கரை மற்றும் பருப்பை போன்றவைகளை ரேஷன் கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ரேஷன் கார்டு பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான அட்டையாகவும் உள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப பெண்களுக்கு அரசு பல நிதி உதவிகளை செய்து வருகிறது. இது மட்டும் இன்றி மகளிர் உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய ரேஷன் கார்டு வாங்க விரும்புபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது. ஓராண்டு கழித்து ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தினை மீண்டும் தமிழக அரசு துவங்கியுள்ள நிலையில் இந்த இரண்டு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2023 முதல் பெறப்பட்ட 2.9 லட்சம் விண்ணப்பங்களில் 1.3 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. ஜூன் 2024க்கு மேல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

கட்டாயமாக்கப்பட்ட சான்றிதழ்கள் :-

பெயர் நீக்கல், பெயர் சேர்த்தல் இவற்றிற்காக திருமண சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றை சமர்ப்பிக்கவில்லை என்றால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், முறையான சான்றுகள், நேரடி கள ஆய்வு ஆகியவை மூலம் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

Previous articleமீண்டும் கேப்டன்சியில் வார்னர்!! வாழ்நாள் தலைமை தடையை நீக்கிய ஆஸ்திரேலியா!!
Next articleஅதிரடியாக குறையப்போகும் பெட்ரோல் டீசல் விலை!! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்!!