வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

0
192

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா காலகட்டத்தில் அனைவரும் முடங்கிப் போன நிலையில் ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் தாமதமின்றி கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் தவறாமல் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வினியோகம் செய்வதற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 1 தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த டோக்கன்களுக்கு ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.மேலும் முக கவசத்துடன், தனிமனித இடைவெளியுடனும் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது.

Previous articleஇது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாரி இருக்கு! பாவம் குவாரண்டின்ல என்னமோ ஆயிடுச்சி போல! பிக் பாஸ் ஷெரினின் நியூ கெட்டப்!
Next articleகுடும்பத்தோடு கொரோனாவுக்கு சிக்கிய தி ராக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here