குடும்பத்திற்கு தலா ரூ.505! இந்த தேதியில் டோக்கன்கள் வழங்கள்!!

Photo of author

By Parthipan K

குடும்பத்திற்கு தலா ரூ.505! இந்த தேதியில் டோக்கன்கள் வழங்கள்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு அதனுடன் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.505 மதிப்புள்ள பொங்கல் பொருட்களுடன் மளிகை பொருட்களும் சேர்த்து வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

பொங்கல் பரிசுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3-ந் தேதி தொடங்கி வைக்கும் நிலையில் அதனை தொடர்ந்து 4-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று அனைத்து நியாயவிலை கடைகளில் உள்ள பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வினியோகிக்கும்படியும், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி உபயோகித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. இன்று முதல் 3-ந் தேதி வரை வீடு வீடாக சென்று அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.