செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க டோக்கன்கள் விநியோகம்!!

0
144

நியாய விலை கடைகளில் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க இன்று முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நியாயவிலை கடைகளில் கூட்டம் கூடுவதால் தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க பொருட்களை வாங்க வருபவர்களுக்கு டோக்கன்கள் கொடுத்து அதில் குறித்த நாள், நேரத்தில் மட்டும் பொருட்கள் வாங்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் செப்டம்பர் மாதத்திற்கான டோக்கன்களை இன்று முதல் . (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் என்ற கணக்கில் நியாய விலை கடை ஊழியர்களே வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். மேலும், நியாய விலை கடைகளில் பொருட்களை செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇளவயதில் ஏற்படும் நரை இந்த நோய்க்கு அறிகுறியா அதிர்ச்சி தகவல்
Next articleஅடிக்கடி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரா கிம் ஜாங் உன்?