மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம் மற்றும் மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன்!!

0
304
#image_title

மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன்.

ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதில் ஐயப்பாடுகள் உள்ளது- செல்வப்பெருந்தகை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் “மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன், அமைச்சர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் கடந்த கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என எடுத்துரைத்தார்.

இளைய பெருமாள் நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி உள்ளோம்..வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுபடுத்த வேண்டும்..அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதில் சிலருக்கு ஐயப்பாடுகள் உள்ளது என தெரிவித்துள்ளோம் அதை தெளிவு படுத்த வேண்டும்.

ஜோதி பாபு, நாராயன குரு போன்ற சமூக நீதிக்கான தலைவர்களின் புத்தகங்களை தமிழாக்கம் செய்ய வேண்டும் அவர்களை பற்றி தமிழகத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளதாக கூறினார்.

வேங்கை வயலில் மலம் கலந்தவிவகாரத்தில் காலம் தாழ்த்த கூடாது. அது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்பதை கூட்டத்தில் சுட்டி காட்டி உள்ளதாக கூறினார்.

பஞ்சமி நிலத்தை கண்டறிய கலைஞர் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் விழுப்புரம் ,தென்னாற்காடு மாவட்டத்தில் இருளர்,குறவர் சமூதயதினர் மீது பொய், திருட்டு வழக்கு போடப்படுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என கூறினார்.

காவல்துறையிடம் தலித் எதிர்ப்பு உளவியல் மேலோங்கி உள்ளது கள்ளகுறிஞ்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன் உதவியாளரை காலணிகளை எடுத்து தர சொல்லியது குறித்த கேள்விக்கு,மாவட்ட ஆட்சியருக்கும் சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

உச்ச நீதி மன்றம் முன்பு அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும் என்று விசிக கோரிக்கை வைத்து வருகிறது.வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம் என கூறினார்.
தெலுங்கானாவில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என்றார்.

Previous articleகள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு!
Next articleநீர்வழித்தடங்களை ரியல் எஸ்டேட்களாக மாற்ற அனுமதிக்காமல் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!