முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டி!! சேலத்தில் கோலாகல தொடக்கம்!! 

0
359
District Kabaddi Tournament for Chief Minister Cup!! Big start in Salem!!
District Kabaddi Tournament for Chief Minister Cup!! Big start in Salem!!
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டி!! சேலத்தில் கோலாகல தொடக்கம்!!
முதலமைச்சர் கோப்பை காண சேலம் மாவட்ட அளவிலான கபடி போட்டி விநாயக மிஷன் கல்லூரியில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான போட்டியில்,
 ஸ்ரீ சக்தி விகாஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடத்தையும், மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், தேக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் ;
சேலம் AVS கலை கல்லூரி முதல் இடத்தையும், சேலம் ஸ்ரீ கணேஷ் காலேஜ் இரண்டாம் இடத்தையும், ஓமலூர் ஏ வி எஸ் கல்லூரி மூன்றாம் இடத்தில் பெற்றன.
பள்ளி மாணவிகளுக்கான போட்டியில்;
நங்கவள்ளி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி முதலிடத்தையும், வேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், வேலூர் ஸ்ரீ சக்தி விகாஸ் மேல்நிலைப்பள்ளி மூன்றாம்  இடத்தை பிடித்தன.
பொதுப் பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் பாரப்பட்டி பிரதர்ஸ் அணி முதலிடத்தையும் , கிடீர் கிட்டு அணி இரண்டாம் இடத்தையும், சோளம் பள்ளம் எம் ஆர் எஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
சேலம் மாவட்ட கபடி சங்கத் செயலாளர் மற்றும் முன்னாள் இந்திய அணியின் கபடி வீரர் சாமியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை சேலம் விநாயக மிஷின் உடற் கல்வியில் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் , மாணவர்கள், மாணவிகள் செய்திருந்தனர்.
Previous articleதமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! 
Next articleஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!!