இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

Photo of author

By Gayathri

நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (06.11.2024) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதுஅறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை கல்வியாண்டில் சரி செய்வதற்காக வருகிற நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்றும் அம்மாவட்டத்தின் கலெக்டர் ப.ஆகாஷ் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கான விடுமுறையை சரி செய்யும் விதமாக நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக, ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என்றால் அதனை ஈடு செய்யும் விதமாக அம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பணி நாளாக அறிவிப்பது அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான செயலேயாகும்.