போனிக்கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரமாண்டமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பு மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது மாறி தற்பொழுது பார்த்தவர்களின் கருத்தை கேட்டு பார்காதவர்களின் எண்ணகள் பார்க்கவேண்டும் என்ற ஆசை வின்னைமுட்டும் அளவிருக்கு உயர்ந்துள்ளது.
தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பெண்களின் நிலையை எடுத்துக்கூறும் படமாக அமைந்துள்ளது. இதனால் பெண்களின் மத்தியில் நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை உள்ளது.
சூர்யா,சிவகார்த்திகேயன், நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி சரதகுமார், சித்தார்த் போன்றவர்கள் வெளிப்படையாக பாராட்டியுள்ளனர். முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக அஜித் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் என கருத்து தெரிவித்தனர். இதனால் இன்னும் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
முன்னதாகவே இந்த படம் சிங்கப்பூர் மலேசியா போன்ற தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது அங்கிருந்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளதாக படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை இந்த கருத்துக்கள் மெருகேற்றியது.
தமிழகத்தில் ரிலீஸ் ஆன முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து உள்ளது. ரிலீஸ் ஆன அன்று வேலை நாட்களாக இருந்தாலும் கூட நல்ல வசூல் செய்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ஏறக்குறைய 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது அஜித் படங்களில் அதிகமாக வசூல் செய்த படமாக கருத படுகிறது.
தென் தமிழகத்தில் நல்ல வசூலை ஈட்டி உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறும்பொழுது, கமர்சியல் ரீதியான படங்களே தென் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் இந்த படம் அப்படி இல்லாமல் சமூக பிரச்சனை சார்த படமாக உள்ளது. இருந்த போதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமூகம் ரீதியான படங்கள் வெற்றி பெற்றாலும் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையாது. குறைவாகவே வசூலை ஈட்டும். ஆனால் நேர்கொண்ட பார்வை படம் அப்படி இல்லாமல் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் படம் நல்ல வசூலையும் படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் விதியையே மாற்றி விட்டது இந்த படம். நாளுக்கு நாள் தியேட்டர் வரும் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.