சமீப காலமாகவே அதிக அளவில் திரை பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விவாகரத்து பெறக்கூடிய நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகிறது. திருமணம் செய்து அதன் பின்பு உடனடியாக விவாகரத்து பெற்று ஜீவனாம்சம் என்ற பெயரில் அதிக அளவு தொகையை பெண்கள் பெற்றுக் கொள்வதாகவும் திருமணத்தை வியாபாரமாக பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஆனால் இதுபோன்று எதுவும் இல்லாமல் அதாவது திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்த பெண் விவாகரத்து பெற்ற ஒரு பிரபல நடிகர் தன்னுடைய கணவர் வீட்டில் கொடுப்பதாக கூறிய 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகையை பெற மறுத்த தன்னுடைய சொந்த காலில் தன்னால் நிற்க முடியும் என்றும் தன்னால் தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்றும் தன்னம்பிக்கையோடு கூறி நடை போடக்கூடிய வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் பிளேயர் யுவேந்திர சாகல் அவர்களின் விவாகரத்தானது வழக்காக நீதிமன்றத்திற்கு வந்த பொழுது அவருடைய மனைவி சாகலிடம் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கேட்டிருந்தார். திருமணமான சிறிது காலத்திலேயே இது போன்ற ஒரு பெரிய தொகையை ஜீவனாம்சமாக கேட்பது பணத்திற்காகவே திருமணம் செய்து கொண்டது போல் உள்ளதாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற ஒரு சூழல்தான் 2021 ஆம் ஆண்டு தன்னுடைய பல நாள் காதலனும் தன்னுடைய கணவனுமான நாக சைதன்யாவை சமந்தா அவர்கள் பிரிவதாக அறிவித்த விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். இவர்களின் விவாகரத்து காலத்தில் நாக சைதன்யா தரப்பிலிருந்து 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக அறிவித்திருந்த நிலையில் சமந்தா அவர்கள் அதில் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல் விலகி சென்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் சமந்தாவின் மதிப்பு மரியாதையை உயர்த்துவதாக அமைந்திருக்கிறது.