சினிமா துறையில் விவாகரத்து கோரி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோடிகள்!! இவர்கள் தான்!!

Photo of author

By Jeevitha

Cinema news: சினிமா துறையில் சமீபத்தில் தொடர்ந்து விவாகரத்து நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என பலராலும் கூறப்படுகிறது. சமீபத்தில் விவாகரத்து கோரி சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 4 ஜோடிகள் இவர்கள் தான். நடிகர்கள் மத்தியில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக விவாகரத்து வாங்கி கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள்.

முதலில் சினிமாத்துறையில் விவாகரத்து என அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோடி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. அவர்கள் தங்களது 17 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை முடித்து விட வேண்டும் என இருந்த நிலையில் தற்போது அவர்கள் பிரிய விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். அடுத்ததாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இவர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்து, பின்னர் கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் காதல் திருமணம் விவாகரத்து என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

அடுத்த ஜோடியாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி. அவர்கள் தங்களது 17 வயது திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்து பிரச்சனைகளை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக தகவல்கள் வந்துள்ளன. இவர்கள் தங்களது 29 ஆண்டு திருமண வாழ்க்கையை மறந்து பிரிந்து வாழ்வதாக தகவல்கள் பெரும் அளவில் இணையத்தில் வலம் வருகிறது. இதன் விவாகரத்துக்கு முக்கிய காரணம் இவர்களின் அவசர முடிவு மற்றும் கருத்து வேறுபாடு என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.