Breaking News, Cinema

ராஜமாதாவுக்கு விவாகரத்து! உண்மையை உடைக்கும் கணவர்!

Photo of author

By Rupa

ராஜமாதாவுக்கு விவாகரத்து! உண்மையை உடைக்கும் கணவர்!

Rupa

Button

தமிழ் சினிமாவில் 80-களில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் தொடங்கி பாகுபலி படத்தில் ராஜா மாதா வரை திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடித்த கதாபாத்திரங்கள் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் ,இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.  இவர் தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சியை  காதலித்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்,  இவ்விருவருக்கும்  ரித்விக் வம்சி என்ற மகன்  உள்ளார்.  இந்த நிலையில்   நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும்  அவரது கணவர் வம்சி -க்கும் இடையில் விவாகரத்து  நடந்து விட்டது. என்ற, தகவல் காட்டு தீயாய் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இது குறித்து இயக்குநர் வம்சி பேசுகையில், “நானும் என்னுடைய மனைவியும் வேலை நிமித்தமாக பிரிந்து உள்ளோம். ஆனால்  இந்த  பிரிவு நிரந்தரம் இல்லை. என்னுடைய மனைவி மிகவும் அன்பானவர், எல்லோருடனும் அன்பாக பழகுவார். என்னுடைய குடும்பத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்து வருபவர். வெளியில் இருப்பது போன்று ரம்யா வீட்டில் இருக்கமாட்டார். எல்லாவற்றிலும்
புத்திசாலியாக யோசித்து செயல்படுபவர்”. என்று  பேசி இருந்தார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கமலின் முன்னாள் மனைவிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு!!

Excel தெரிந்தால் போதும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ!!