Cinema Talkies: தமிழ் திரையுலகில் தற்பொழுது விவாகரத்து ரீதியான வழக்கு அதிகரித்து வருகிறது. தனுஷ் ஐஸ்வர்யா என ஆரம்பித்து தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் வரை அனைவரும் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு முக்கிய காரணம் பேச்சுலர் பட நடிகையான திவ்யபாரதி தான் எனக் கூறுகின்றனர்.
இந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இருவரும் நெருக்கமாக நடித்திருப்பர். அதை வைத்து பலரும் இந்த தகவலை பரப்பி வருகின்றனர். அப்படி பரப்பி வருகின்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திவ்யா பாரதி தனது இன்ஸடாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கும் ஜிவி பிரகாஷ் சைந்தவி விவகாரத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. குறிப்பாக நான் திருமணமான ஆணுடன் கட்டாயம் டேட்டிங் செய்ய மாட்டேன். இவ்வளவு நாட்கள் ஆதாரமற்ற ஒரு தகவலை வைத்து பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன்.
தற்பொழுது இது எல்லையை கடந்து விட்டது. இது மாதிரியான ஆதாரமற்ற தகவல்களால் எனது நற்பெயருக்கு களங்கம் உண்டாகிறது. இப்படி தேவையற்ற வதந்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்துங்கள். இது தொடர்பாக நான் கூறும் முதல் மற்றும் கடைசி அறிக்கை இதுதான் என தெரிவித்துள்ளார்.