விஜய்யுடன் தேமுதிக கூட்டணி.. பிரேமலதா சொன்ன பளிச் பதில்!!

0
6
DMDK alliance with Vijay.. Premalatha's brilliant answer!!
DMDK alliance with Vijay.. Premalatha's brilliant answer!!

DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வரை வெளியிடவில்லை. மாறாக அதிமுக அடுத்த ஆண்டு எம்பி தேர்தலில் சீட்டு வழங்குவதாக கூறி தேமுதிக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் பிரேமலதா நாங்கள் பொதுக்குழு கூட்டத்தில் தான் எங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவ்வாறு இருக்கையில் பிரேமலதா எம்பி சீட் அதிமுக வழங்காது தான் சற்று அதிருப்தியிலும் உள்ளார்.

இவ்வாறு பிரேமலதா அதிருப்தியில் இருக்கும் நிலையை கண்டு மாற்றுக் கட்சியினர் தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள கொக்கி போட ஆரம்பித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் நீங்கள் விஜய்யுடன் இணைய போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து அவர் தான் பதிலளிக்க வேண்டும். நீங்கள் அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என கூறிவிட்டார். அதேபோல 2026 ஆம் ஆண்டு கூட்டணி கட்சியானது ஆட்சிக்கு வரும் போது தான் ஏதேனும் தவறு நடந்தால் சுட்டிக்காட்டி பேச முடியும். அதுமட்டுமின்றி வரும் இரண்டு நாட்களில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம் என்றும் கூறினார்.

அதேபோல கனிமவேள கொள்ளை என்பது தற்போது வரை ஓய்ந்த பாடில்லை, இது ரீதியாக ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு கொள்ளை சம்பவம் குறிப்பிட்ட முதியோர்களை குறி வைத்து தாக்குவது நடந்து வருகிறது இதனால் யாருக்கும் பாதுகாப்பில்லை என பேசியுள்ளார்.

Previous articleவேலைவாய்ப்பற்ற இளைஞர்களா.. உடனே இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்!!
Next articleஅவர்கள் விட மாட்டார்கள்.. ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – திருமா பரபர பேட்டி!!