Breaking News, District News, Madurai, Politics, State

திடீரென கட்சி மாற்றம்! திமுகவை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

Photo of author

By Anand

புதுக்கோட்டை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “அரசியலில் நம்பிக்கையே முக்கியம். அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, நாங்கள் 5 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் பெறுவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நம்பிக்கையை காப்பது அதிமுகவின் கடமை” எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியதைப் பாராட்டிய பிரேமலதா, “அவர்கள் தங்கள் வார்த்தையை நிறைவேற்றினர். நாங்களும் அதே நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என கூறினார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு உறுதியளித்த மாநிலங்களவை இடத்தை வழங்குமா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கியமான கேள்வியாக உள்ளது.

மேலும், பிரேமலதா, “பொறுமை என்பது கடலுக்கு மேல். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். ஆனால், நம்பிக்கையை காப்பது முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு மாநிலங்களவை இடத்தை வழங்குமா அல்லது புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெளிவாகும்.

“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்

சேலம் மாநகராட்சியில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர் தாக்குதல்: பரபரப்பான மன்ற கூட்டம்