விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்

Photo of author

By Jayachandiran

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரும், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இவர் 2011 ஆம் ஆண்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். தேமுதிக கட்சியின் பொருளாளராக இருந்த நிலையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏ-வாக மாறி அக்கட்சியில் இணைந்து கொண்டார். தேமுதிக தரப்பில் இதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார். இவருக்கு அதிமுக தரப்பில் போட்டியிட சீட் தரவில்லை. தனது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து ஒதுங்கி இருந்த சுந்தர்ராஜன் விஜயகாந்த்தை சந்தித்து பேச இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.