தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தது தான் தேமுதிக கட்சி, அரசியல் கட்சி தொடங்கிய 2 தேர்தலிலே வாக்கு வங்கியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுத்தியது. 3வது தேர்தலிலே சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் ஆனார் கேப்டன் விஜயகாந்த்.
அந்த ஆண்டு தேர்தலின் போது தேமுதிக அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அதன்பிறகு மதிமுக, திமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக டெபாசிட் இழந்தது.
அந்த தேர்தலில் இருந்தே தேமுதிக விற்கு இறங்குமுகம் தான் இருந்து வருகிறது.
சட்டமன்றத்தேர்தலின் போது தேமுதிக கூட்டணியை புறக்கணித்தது திமுக.
இந்நிலையில் தற்போதைய கட்சி கூட்டங்களில் எல்லாம் பிரேமலதா விஜயகாந்த் திமுக ஆட்சியைப்பற்றி பெருமையாகவே பேசி வருகிறார்.
இதனால் தேமுதிக திமுக உடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பொழுது நகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் கூறினார்.