தேமுதிக கட்சி விஜயகாந்திற்கு சிகிச்சை – மியாட் மருத்துவமனை தகவல்!

Photo of author

By Parthipan K

தேமுதிக கட்சி விஜயகாந்த் அவர்களுக்கும் அவரது மனைவி பிரேமலதா அவர்களுக்கும் அண்மையில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. 

உடல் நிலையிலும் சீரான முன்னேற்றம் கண்டறிந்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நேற்று இரவு திடீரென்று விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சென்னையில், நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்  மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட சீரான சிகிச்சை அளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று  அந்த மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் விஜயகாந்திற்கு கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விஜயகாந்த் அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.