தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா?
மேகதாது அணை கட்டுத்த பிரச்சனைக்கு இன்றளவும் எந்தவித்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கு தீர்வு ஒன்று வந்தும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.தற்பொழுது திமுக ஆட்சி அமர்த்திய பிறகு முன்னாள் கர்நாடக முதல்வர் எடியுரப்பா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதில் இரு மாநிலங்களும் சமரசம் முறையில் ஈடுபட்டு அணையை கட்டிமுடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு பதில் கடிதமாக மு.க ஸ்டாலின் அவர்கள் இரு மாநிலங்களும் சமரம் ஏற்படுத்திக்கொண்டு அணையை கட்டினால் இங்குள்ள விவசாயிகள் நிலை மிகவும் மோசமடைந்து விடும்.
அதனால் நாங்கள் ஒருபோது அணை கட்ட ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று கூறி பதில் கடிதம் எழுதியிருந்தார்.அதனையடுத்து மத்திய நீர் வளத்துறை அமைச்சரை நேரில் சென்று கர்நாடக முதல்வர் முறையிட்டார்.அதன்பின் நமது தமிழக முதல்வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் அணை கட்டுதல் தடுத்து நிறுத்துமாறு மனு ஒன்றை அளித்தார்.தற்போது உச்சநீதிமன்றமும் மேகதாது அணை கட்ட வேண்டுமென்றால் கட்டாயம் காவேரி கீழ்படுக்கையில் உள்ள மாவட்டங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று கூறியது.
அதனையெல்லாம் மீறி தற்போது அணை கட்டியே தீருவேன் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேகதாது அணை கட்டுவது குறித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஓசூரில் ட்ராக்டர் மூலம் பயணம் செய்து மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
கவேரியில் மேகதாது அணை கட்டிவிட்டால் இங்குள்ள விவசாயிகள் நிலை என்ன ஆகுவது என முழக்கமிட்டார்.மேலும் செய்தியாளர்களிடம்,மத்திய மற்றும் மாநில அரசு சேர்ந்து அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும் அவர் கூறியது,நமது பூமி விவசாயம் சார்ந்தது.அதனால் நமக்கு தண்ணீர் மிகவும் அவசியம். மேகதாதுவில் அணை கட்டினால் நிச்சியம் நமக்கு தண்ணீர் வராது என கூறினார்.தமிழகம் மற்றும் கர்நாடக இருவரும் ஓர் தாய் பிள்ளைகள் என்று கூறினார்.பிரிவினை இன்றி அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசினார்.