திமுக அதிமுக 200 பேர் மீது வழக்கு பதிவு! உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்!
நேற்று தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆவலாக வாக்களித்து வந்தனர்.இந்த முறை ஆட்சியை யார் கை பற்றுவார் எனக் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் சில வாக்கு பதிவு இடங்களில் பரபரப்பான சம்பவங்கள் நடந்த வண்ணமாக தான் இருந்தது.அந்தவகையில் தொண்டமுத்தூர் பகுதியை பார்வையிட வந்த திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியின் கார் மீது அடையாளம் தெரியாத அதிமுகவினர் கட்டையால் தாக்க முயன்றதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதனையடுத்து நடக்கும் தாக்குதலை தடுக்க வேண்டிய போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியி முறையிட்டார்.இந்தநிலையில் தீவிர விசாரணையில் அந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுக என 200 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து இடையூர் செய்ததற்காகவும் மற்றும் நோய் பரப்பும் வகையில் செயல்பட்டுள்ளனர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உடனுக்குடனே விசாரித்து இவ்வாறு முடிவெடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.