DMK: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை செய்வதிலிருந்து விடுவிக்க கோரிய வழக்கானது செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த ஒரு வருடமாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இவரை ஜாமினில் வெளியே கொண்டுவர மனு அளித்தும் உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து வருகிறது. தற்பொழுது ஜார்கண்ட் முதல்வர் இதே போல ஒரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியேறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் மகளும் ஜாமினில் வெளியேறியதுடன் அமலாக்கத்துறைக்கும் சராமாரி கேள்விகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஒரு ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி வழக்கில் இதனையெல்லாம் முன்னிறுத்தி ஜாமீன் கிடைக்க வழி செய்வதாக அவரது வழக்கறிஞர்கள் தமிழக அரசிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்று அமலாக்கத்துறை விசாரணை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவிலும் தற்பொழுது கால அவகாசம் கேட்டுள்ளதால் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். மேற்கொண்டு கால அவகாசம் இனி தர முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வருகையை எண்ணி ஸ்டாலின் மற்றும் இதர நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது.