PMK: பாமக கட்சிக்குள் தலைமை பதவிக்கான போட்டி நிலவு வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியும் சூழல் உண்டாகியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் மகள் வழி பேரனை பொறுப்பில் அமர்த்தியது ரீதியாக கருத்து வேறுபாடு உண்டானது. நாளடைவில் இதுவே நீயா நானா என்று போட்டி போடும் நிலைமைக்கு தள்ளியுள்ளது. அதிலும் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கியதோடு எனது கடைசி மூச்சு வரை நான் தான் தலைவர் எனக் கூறி வருகிறார்.
இதனை அன்புமணி ஒருபோதும் ஏற்கவில்லை. மாறாக அவருக்கு கட்சிக்குள்ளேயே தங்களின் சுயநலத்திற்காக சொல்லிக் கொடுக்கிறார்கள் எனக் கூறி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் பணி அமர்த்துபவர்களை அன்புமணி நீக்கும் செயலானது தொடர்ந்து வருகிறது. அதில் சேலம் மாவட்டம் பாமக எம்எல்ஏ அருளுக்கு ராமதாஸ் முக்கிய பதவியை கொடுத்தார்.
இதையடுத்து அன்புமணி அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராமதாஸ் கூறியதாவது, பாமக எம்எல்ஏ அருள் கொறடாவாக இருப்பதால் அவரை நீக்க முடியாது. மேற்கொண்டு அவரை நீக்க வேண்டுமென்றால் ஜிகே மணி-யிடம் கடிதம் கொடுத்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்து தான் இதனை செயல்படுத்த முடியும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி அதிமுக அல்லது திமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் அதனை மாநில செயற்குழு பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு என அனைவரும் ஆலோசனை செய்து தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் இவர் திமுகவுடன் கூட்டணி வைக்க மும்மரம் காட்டுவதாக பாமக வட்டாரங்கள் பேசுகின்றனர். அப்படி திமுக வுடன் கூட்டணி வைத்தால் திருமா கூட்டணியிலிருந்து விலக கூடும்.