எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் முதல்வராக நியமிக்கப்பட்டாலும் மக்கள் அவரை ஆளுமை வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை. ஆனால், எதிர்கட்சி தலைவராக ஸ்கோர் செய்து வந்தார் மு.க.ஸ்டாலின். அவருக்கு கலைஞரின் மகன் என்கிற இமேஜ் இருக்கிறது. அதுதான் அவரை முதல்வராகவும் மாற்றியது. 2011 முதல் 2021 வரை 10 வருடங்கள் திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், அதிமுகவுக்கு சிறந்த எதிர்கட்சியாக திமுக விளங்கியது.
அப்போதுதான் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கடந்த 4 வருடங்களாக எதிர்கட்சி தலைவர் போல செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. திமுகவின் ஊழலை பட்டியலிட்டு செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். எனவே, எடப்பாடி பழனிச்சாமி டம்மி ஆகிப்போனார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழலை தனி நீதிமன்றம் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்கு வந்த பின் அப்படி எதுவும் செய்யவில்லை.
கொடநாடு கொலை தொடர்பான வழக்கை கூட திமுக சரியாக நடத்தவில்லை. 10 வருடங்கள் நீங்கள் அடித்த கொள்ளை பற்றி நாங்கள் கேட்க மாட்டோம். நாங்கள் அடிக்கும் கொள்ளையை நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது என அதிமுகவிடம் டிலிங் போட்டு திமுக ஆட்சி நடத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், திமுக செய்யும் ஊழல்கள் பற்றி அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.
எதிர்கட்சி தலைவர் போல அண்ணாமலை செயல்படுவது பழனிச்சாமிக்கும், தங்களின் ஊழல் பற்றி பேசுவது ஸ்டாலினுக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதால் அவரை எப்படியாவது தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்க இருவரும் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், அண்ணாமலை போய்விட்டால் தன்னுடைய இமேஜ் உயரும் என பழனிச்சாமியும் கருதுகிறார். அதன்படியே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது அண்ணாமலையின் பதவியை பறித்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். இதற்கு இடையில்தான் தமிழக பாஜகவுக்கு வேறு தலைவர் என்கிற செய்தி தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், உளவுத்துறை மூலம் அதிமுக, திமுக இரண்டும் கை கோர்த்தே அண்ணாமலையை தூக்க திட்டமிட்டதை கேட்டு அதிர்ந்து போன அமித்ஷா 2026 சட்டமன்ற தேர்தல் வரை அண்ணாமலையே தமிழக பாஜக தலைவராக இருக்கட்டும் என சொல்லிவிட்டதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.