அதிரடி பதிலை தெரிவித்த திமுக! அதிர்ச்சியடைந்த விசிக அவசர ஆலோசனை!

Photo of author

By Sakthi

திமுக கூட்டணியில் வெகுகாலமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்று இருக்கின்றது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை கொடுத்து இருந்தது. திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்பொழுதும் அதே உத்தியை கையாள்வதாக இருக்கிறது திமுக.

அதற்கு திமுக போட்ட திட்டம் என்னவென்றால், தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் தர இயலும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிர்ச்சியடைந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவீர்கள் என்ற விதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

உதயசூரியன் சின்னத்தில் நிற்பது என்றால் நான்கு தொகுதிகள் ஒதுக்க இயலும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 5 தொகுதிகள் கொடுப்பதாக திமுக தன்னுடைய இறுதி முடிவாக தெரிவித்திருக்கிறது. தற்சமயம் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை செய்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.