தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை!
கோவை மாவட்டத்தில் திமுக கட்சியில் உள்ளவர் அலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இது வாட்ஸ் குழுக்களில் வைரலாக பரவி வருகிறது. இது திமுக தலைமையின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைத்துள்ளது.
“மாவட்டச் செயலாளர் பதவி என் காலுக்கு சமம் “,“ எவனா இருத்தாலும் அஞ்சமாட்டேன்” என சொல்ல முடியாத வார்த்தைகள் இந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி பேசிய ஆடியோ ஒன்றால் பெறும் பிரச்சனை ஏற்ப்பட்ட்டுள்ளது.
கணேசன் என்பவர் கோவை மாவட்ட அரிசிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். புதிதாக பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடம் ஒன்று கட்டினார். புதிதாக கட்டிய பஞ்சாயத்து அலுவலகத்தை திறப்பதற்காக செந்தில்பாலாஜியிடம் தேதி வாங்கித் தருமாறு கூறி மருதமலை சேனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் கணேசனிடம், அமைச்சரெல்லாம் வரமாட்டார், நீயே போய் திறந்த்துக்கோ என கூறினார். அப்போது கணேசன் அங்கு இருத்து புறப்பட்டார். இதனால் கணேசன் தனது நெருக்கமானவர்களிடம் தனக்கு நடந்த நிகழ்வை கூறினார்.
இதையடுத்து அரிசிபாளையம் கணேசனை செல்போனில் தொடர்புகொண்டு “மாவட்டச் செயலாளர் பதவி என் காலுக்கு சமம் “,“ எவனா இருத்தாலும் அஞ்சமாட்டேன்” என்று மருதமலை சேனாதிபதி சொல்ல முடியாத வார்த்தைக்களால் திட்டியுள்ளார். இந்த குரல் திமுக தலைமையையும், அமைச்சர் செந்தில்பாலாஜியையும் நேரடியாக சீண்டிப்பார்க்கும் வகையில் அமைந்ததால் இந்த விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் தான் தொண்டர்களையும், கீழ்மட்ட நிர்வாகிகளையும் அணுசரித்து நடக்க வேண்டும் என சொல்லி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அதற்குள் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததால் உச்சக்கட்ட கோபத்தை அடைந்தார். இந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல என மருதமலை சேனாதிபதி மறுப்பு தெரிவித்து வருகிறார்.