தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக!! முன்னாள் அமைச்சர் கருத்து!

Photo of author

By Sakthi

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக!! முன்னாள் அமைச்சர் கருத்து!

Sakthi

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக! முன்னாள் அமைச்சர் கருத்து.
தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக கட்சி என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றப்படவுள்ளது என்ற தகவலுக்கு ஏற்ப இன்று இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தில் தமிழகத்தின் புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். டி.ஆர்.பி ராஜா அவர்களுக்கு தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து டி.ஆர்.பி ராஜா அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை பற்றி அதிமுக முன்னாள் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பாலு அவர்களின் மகன் டி.ஆர்.பி ராஜா அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் இப்போது ஜமீன்தாரி ஆட்சி முறை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தாத்தா, அப்பா, பிள்ளை, பேரன் என வழி வழியாக வருவதுதான் திமுக கட்சி. திமுக கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இருக்காது. தொண்டனும் தலைவனாக வேண்டும் என்பதுதான் அதிமுக கட்சி. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதலமைச்சரானது” என்று அவர் கூறியுள்ளார்.