அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக நீட்டிக்கபட்டு தற்போது சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக விலகல் மூலமாக தான் வைரஸ் பரவலை கட்டுபடுத்த முடியும் என உணர்ந்து உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசும் இது குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பொதுமக்களும் பெரும்பாலான இடங்களில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் வழக்கம் போல தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலமாக மக்களை சந்திக்க ஆரம்பித்தது. இதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் உயிரிழந்தார்.

இதைப்பார்த்தும் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை உணராத திமுகவினர் மீண்டும் அரசின் அறிவுறுத்தலை மீறி பொது இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டிபேரூர் கழக செயலாளர் ஐ. முகமது அலி ஜின்னா அவர்கள் கடந்த மார்ச் மாதம் காலமானதை தொடர்ந்து அவருடைய பொறுப்புக்கு வேறு ஒருவரை தேர்வு செய்வதற்காக தொண்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் முகக் கவசம் எதுவும் அணியாமல்,சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திமுக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இப்படி அரசின் அறிவிப்பை மதிக்காமல் செயல்படுவது பொது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக நடத்திய ஒன்றிணைவோம் வா திட்டத்தினால் அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் திருந்தாமல் மீண்டும் இப்படி ஒரு கூட்டம் நடத்த வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.