போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்!

Photo of author

By Hasini

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021- 2022 நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கூச்சலுக்கு மத்தியிலும் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடம் கூறும் போது இவ்வாறு கூறினார். சட்ட சபை தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றும் கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களை கடந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல், மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு உள்ளது.

நடைமுறைப்படுத்த முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை நன்றாக ஏமாற்றி விட்டது. மேலும் வெள்ளை அறிக்கையின் போது உண்மைக்குப் புறம்பான தகவலை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். வாக்குறுதிகளை மட்டும் அளித்துவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத திமுக அரசுக்கு அதிமுக சார்பிலும் மக்கள் சார்பிலும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை போடுவதையும்,வன்மையாக கண்டிக்கிறோம். அதே போல் இதை எல்லாம் கண்டு அதிமுக ஒரு போதும் அஞ்சாது. நமது அம்மா பத்திரிக்கையில் சோதனை என்ற பெயரில் ஒரு நாள் பத்திரிகை வெளியிட முடியாமல் தடுப்பதற்காகவும், பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்குவதற்காகவும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்று அதில் தெரிவித்தார்.