பட்ஜெட் உரையை புறக்கணித்த அதிமுக! சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!

0
81

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இன்று காலை 10 மணி அளவில் கூடியவுடன் சபாநாயகர் இந்த முறை தமிழக சட்டசபையில் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பேச ஆரம்பித்தார். ஆனாலும் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, அவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் கேட்கவில்லை அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக தங்கள் இருக்கையில் அமர வேண்டும் இன்றுதான் முதன்முதலாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திங்கள்கிழமை அன்று விவாதம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

விவாதம் நடைபெறும் திங்கள்கிழமையன்று உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம் அப்போது உங்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார் சபாநாயகர்.ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அவர் உரையாற்றினார் அவருடைய கையில் இருந்த ஒரு சில குறிப்புகளை பார்த்து அவர் வாசித்ததாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அவர் பேச்சில் எதுவும் கேட்கவில்லை இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

இதன்காரணமாக, சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது அமளியின் காரணமாக, அதிமுகவினர் பேசியது எதுவும் கேட்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று தெரிவித்த சபாநாயகர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அதன் அடிப்படையில் நிதி அமைச்சர் தியாகராஜன் அமளிக்கிடையே நிதிநிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தார்கள்.