மதுரை நகர திமுக செயலாளரின் தேர்தலில் தளபதி சட்டசபை உறுப்பினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் மூலமாக அமைச்சர் மூர்த்தி கை ஓங்கியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் மதுரை நகரில் இரண்டாக இருந்த அமைப்பு ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே நகர் தெற்கு செயலாளராக இருந்த தளபதி சட்டசபை உறுப்பினரும், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அதலை செந்திலும் போட்டியிட்டனர்.
இதில் தளபதிக்கு அமைச்சர் மூர்த்தியும் அதலை செந்திலுக்கு அமைச்சர் தியாகராஜனும் மறைமுக ஆதரவை வழங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. திமுகவின் 72 மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு இங்கே வட்டம், பகுதி மாவட்ட பிரதிநிதிகளுக்கு பல லட்சங்கள் வாரி இறைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தவிர்த்து ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்களை சென்னை மற்றும் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று சொகுசு விடுதிகளில் 3️ நாட்கள் தாங்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
சென்னையில் நேற்றைய தினம் நடந்த மனு பரிசீலணையில் கடைசி சமயத்தில் அதலை செந்திலுக்கு நிர்வாகிகள் ஆதரவு போதிய எண்ணிக்கையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே அவர் தன்னுடைய மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். தளபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
திமுக நிர்வாகிகள் இது தொடர்பாக தெரிவித்ததாவது: இந்த தேர்தல் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையில் நடைபெற்றது. என்பதுதான் எங்களுடைய கருத்து மதுரை மேயர் தேர்தலில் தியாகராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு தன்னுடைய ஆதரவாளரை பதவிக்கு கொண்டு வந்தார். மாவட்டச் செயலாளர்கள் தேர்தலிலும் மறைமுகமாக தலையிட்டார். ஆகவே இந்தத் தேர்தலில் மூத்த நிர்வாகிகள் எல்லோரும் ஒன்றிணைந்து தளபதியை வெற்றி பெற வைக்க களமிறங்கினர் என்று சொல்லப்படுகிறது.
அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கும்போது அதலை செந்தில் மனுவை திரும்ப பெறவில்லை. வெற்றி தொடர்பாக கட்சி அறிவித்த பிறகு கருத்து தெரிவிப்போம் அதற்கு முன்பாக எதுவும் நடைபெறலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.