எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு!

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு!

தற்போது தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோம்பர் பத்தாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் நாளை மதியம் 12 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நுழைவு சீட்டை தனித்தேர்வர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அங்கு தங்களின் பதிவெண்  மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுடைய அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேர்வின் போது நுழைவு சீட்டு இல்லையெனில் தேர்விற்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.இதனையடுத்து விரிவான தேர்வுக்கால அட்டவணை உள்பட கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளாலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.