ஸ்டாலினுக்கு பெரும் இடி!! தேர்தல் அறிவிப்புக்களை நிறைவேற்றா திமுக.. நேருக்கு நேர் சாடிய கூட்டணி கட்சி!!

0
389
DMK does not fulfill the election announcements.
DMK does not fulfill the election announcements.

DMK CPM: திமுக, மக்களிடம் கூறிய தேர்தல் அறிவிப்புக்களை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்குமாறு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு எதிரான முரண்பட்ட கருத்துக்களை கூட்டணி கட்சிகள் முன்வைக்க ஆரம்பித்து விட்டனர். இது நாளடைவில் பிளவை உண்டாக்கும் வகையில் உள்ளது. திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆனது சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பது குறித்து தமிழக அரசு ரத்து செய்ததால் தொடர் கண்டனம் அளித்து வந்தது.

தற்சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர், திமுக 4 ஆண்டுகள் ஆட்சி அமைத்து மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவற விட்டதாக தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம் என தொடங்கி ஆசிரியர்கள், மின்சார ஊழியர்கள் வைத்த கோரிக்கை வரை எதையும் ஆளுநர் உரையில் தமிழக அரசு குறிப்பிடவில்லை.

முக்கியமானவற்றை விட்டு தமிழக அரசு அவர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் செயல் முறையில் உள்ள நலத்திட்டம் குறித்து அதன் செயல்பாட்டினை மட்டுமே குறித்து குறிப்பிட்டுள்ளனர். பாமர மக்களும் மிகவும் அதிருப்தியில் உள்ள மின் கட்டணம் உயர்வு சொத்துவரி உயர்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அதில் இல்லை. குறிப்பாக மின்சார கட்டணம் குறித்து ஒரு சிறு தொழில் வியாபாரிகள் கூட மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர்களின் நம்பகத் தன்மையை உடைக்கும் விதமாக இது உள்ளது. மேற்கொண்டு கோவில்களுக்கு அருகில், பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்யலாம். இதனையெல்லாம் நிறைவேற்ற தமிழக அரசு முன்னுரிமை கொடுப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

Previous articleகால்சியம் குறைபாட்டை போக்கும் பானம்!! தினம் ஒரு கிளாஸ் குடித்து பலன் பெறுங்கள்!!
Next articleஅரசியல் குறித்த கேள்வி.. ரஜினி அளித்த பளீச் பதில்!! 2026 ரெடியாகும் மெகா கூட்டணி!!