பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

Photo of author

By Sakthi

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் இந்துமத கொள்கையை அடிப்படையாக கொண்டு தன்னை இந்தியா முழுவதிலும் வளர்த்து வைத்திருக்கிறது அந்த கட்சி. ஆனால் இந்த இந்து மதக்கொள்கை என்பது வட இந்தியாவைப் பொறுத்தவரையில் பெருமளவில் காணப்படுகிறது. தென்னிந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இந்த இந்து மதக் கொள்கைகள் வேலை செய்வது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தமிழகம்தான் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து மதம் இருக்கிறது. ஆனால் இந்து மதப் பற்றாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு சிலர் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக இந்து மதத்தை கொச்சை படுத்தும் விதமாகவும், இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி அதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை கவர்வது வாடிக்கையாகிவிட்டது.

அதோடு அந்த கும்பல் இந்துமத பெண்களையும் விட்டு வைக்கவில்லை பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் இந்துமத பெண்களையும் அசிங்கப் படுத்தும் விதமாக அவர்கள் பேசியிருக்கிறார்கள். இந்து மதத்தை சார்ந்தவர்கள் அதிகமாக வாழ்வதாலே நம்முடைய நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் அந்த இந்து மதக் கொள்கையை மிகத் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருந்தாலும் தென்னிந்தியாவில் இந்த இந்து மதத்திற்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

அதனாலேயே சில விஷமிகள் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக இந்து மதத்தையும் இந்து மத நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தும் ஒரு சில விஷயங்களை செய்து வருகிறார்கள்.தமிழகத்தை பொறுத்தவரையில் சாதி அரசியலை கையிலெடுத்தால் நிச்சயம் வெல்வதற்கு வாய்ப்புண்டு எனலாம். எனவே வட இந்தியாவைப் போலவே தமிழகத்திலும் இந்து மதத்தை வைத்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்பதே பாஜகவினரின் திட்டமாக இருந்தது.

ஆகவே தமிழகத்தில் இருக்கின்ற ஆறுபடை வீடுகளை நோக்கி பாரதிய ஜனதா கட்சியினர் யாத்திரையை தொடங்கினார்கள். வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்தோடு முன்னேறிச் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தமிழகம் முழுவதிலும் கோவில்களை வலம் வந்தார்கள். இது தங்களுக்கு கணிசமான அளவில் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று அந்த கட்சியினர் நம்பியிருந்தார்கள்.

இருந்தாலும் தேர்தல் முடிவில் அதற்கு எதிர்மறையாக நடந்திருக்கிறது. ஆறுபடை வீடு அமைந்திருக்கின்ற ஆறு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி ஒன்றில் கூட களம் காணவில்லை. இந்த தொகுதிகளில் அதிமுகவே களம் கண்டது. அதிலும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், சுவாமிமலை ,திருச்செந்தூர், மதுரை கிழக்கு, திருத்தணி ,பழனி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்காரணமாக முருகனை முன்னிலைப்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சி செய்த அரசியல் தமிழகத்தில் போதிய பலன் அளிக்கவில்லை என்று தெரியவந்திருக்கிறது.