திமுக வேட்பாளர் வெளியிட்ட வைரல் வீடியோவால் காற்றில் பறந்தது திமுகவின் மானம்!

Photo of author

By Sakthi

தேர்தல் நெருங்க நெருங்க திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் ஆகவே இருந்து வருகிறது.தேர்தல் தொடர்பாக அனேக விளம்பரங்களை திமுக பல தொலைக்காட்சிகளிலும் கொடுத்து விளம்பரப்படுத்தி வருகிறது.அப்படி வெளியிடப்படும் விளம்பரங்களில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் பாஜகவையும் நேரடியாக விமர்சனம்.செய்யும்.வகையில் பல விளம்பரங்கள் ஒளிபரப்ப படுகின்றன.இது தமிழகம் முழுவதிலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரம் என்ற என்ற பெயரில் ஒரு விளம்பரம் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது அனைவர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது திமுகவிற்கு எதிராக திமுக கொண்டுவந்த நீட் தேர்வு தேர்தல் விளம்பரம் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தியா முழுவதற்குமே நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தான் அதோடு நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் செய்தது அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் மட்டும் தான். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு அதிமுக போட்ட வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிற சிதம்பரத்தின் மனைவி போராடி தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டு வந்தார்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நீட் தேர்வை அதிமுக மற்றும் பாஜகத்தான் கொண்டு வந்தது என்று திமுக தேர்தல் பிரசாரம் செய்து வருவது என்பதை பார்த்து பித்தலாட்டம் என்று தமிழக மக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற ஒரு பிரச்சார காணொளியில் இருக்கின்ற விஷயம் கேலிக்கூத்தாக போயிருக்கிறது. இந்தப் பிரச்சார காணொளியில் ஒரு பணக்கார வீட்டு மனைவி நாகரீக உடை அணிந்து கொண்டு என்னுடைய கணவர் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வரும் சமயத்தில் ஒரு டைமண்ட் வாங்கி வந்திருக்கிறார் என்று பெருமையாக உரையாற்றுகிறார் கைபேசியில்.

அந்த சமயத்தில் வரும் அந்த பணக்கார கணவர் ஒரு டீ போட்டுக் கொடு என்று அந்த பணக்கார மனைவியிடம் கேட்டு இருக்கின்றார். உடனே மனைவி டீ போடுவதற்கு சமையலறைக்கு போகிறார். வெகு நேரமாகியும் வெளியே வரவில்லையே என்று அந்தக் கணவன் சமையல் அறையில் சென்று பார்த்த சமயத்தில் அங்கே மனைவி விறகு அடுப்பில் டீ போட்டு கொண்டு இருந்திருக்கிறார்.

அப்பொழுது அந்த மனைவி கேஸ் சிலிண்டர் விலை 850 ரூபாய் ஆகிவிட்டது இனி இப்படித்தான் டீ போட இயலும் என்று தெரிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய கேலிக்கூத்தாக மாறியிருக்கின்றது. டைமண்ட் வாங்கி வந்த பணக்கார கணவரால் சாதாரண 850 ரூபாய் கொடுத்து ஒரு சிலிண்டர் வாங்க இயலாது? என்கிற ரீதியில் இது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.