DMK: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ்-க்கு பதிலாக திமுக நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலானது தற்போது மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் முதலில் மகன் ஈவேரா போட்டிப்போட்டு வெற்றி பெற்றதை அடுத்து திடீரென்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரை அடுத்து இ வி கே எஸ் இளங்கோவன் நிற்கவைக்கப்பட்டு வெற்றி பெற்றார். தற்பொழுது இவரும் உடல்நல குறைவால் காலமானது அடுத்து மூன்றாவது போட்டியாளராக யாரை நிற்க வைப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க திமுக அமைச்சரவையில் காங்கிரஸ்-க்கு பதிலாக திமுக நிர்வாகிகளையே நிற்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். குறிப்பாக துணை முதல்வரே இதற்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியானது காங்கிரஸின் கோட்டையாக உள்ளதால் மீண்டும் அதான ரீதியான வேட்பாளரை தான் நிற்கவைக்க முடியும்.
இரண்டாவது முறை இடைத்தேர்தல் நடைபெற்ற பொழுது இ வி கே எஸ் இளங்கோவனின் மற்றொரு மகன் சஞ்சய் சம்பத்தை நிற்கவைக்க முயற்சித்தனர். ஆனால் அச்சமயத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை. தற்பொழுது தந்தை மகன் என இருவரும் இறந்த நிலையில் இளைய மகனை நிற்கவைக்க ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாம்.
ஆனால் திமுக நிர்வாகிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமா இந்த முறை மாற்றம் கொண்டு வரலாமே என்று பேசி வருகின்றனராம். குறிப்பாக திமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திர குமார் மற்றும் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் இருவரும் இடைத்தேர்தலில் சீட் பெற ஆர்வம் காட்டி வருவதாக கூறுகின்றனர். திமுக தனது சார் நிர்வாகிகளுக்கு ஆதரவளிக்குமா? அல்லது கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.