திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு!

0
149
#image_title
திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு!
சட்ட விரோத மது பாரில் ஆளும் விடியா திமுக நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டம் நடப்பதாகவும், கோவை மாநகர காவல் துறையினர் இதுகுறித்து கண்டுக்கொள்வதில்லை எனவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் போலி மது பானங்கள் விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரடிமடை பகுதியைச் சேர்ந்த திரு. செல்வராஜ் (வயது 55) என்பவரை, திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகியோர் அடித்துக் கொலை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருவதாகவும், ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கிராமங்களில் சட்ட விரோதமாகவும், கூடுதல் விலைக்கும் மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், மூன்று நாட்களுக்கு முன்பு திரு. செல்வராஜ் என்பவர் திமுக நிர்வாகியின், சட்ட விரோதமாக மது விற்கும் இடத்தில், ஏன் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து திமுக-வின் இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல், கோகுல் மற்றும் உடனிருந்த அடியாட்கள் கரடிமடைக்குச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் திரு. செல்வராஜை அடித்து இழுத்துச் சென்று காட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்ததாக செய்திகள் கூறுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இறந்த திரு. செல்வராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை முடித்த காவல் துறையினர், உடனடியாக திரு. செல்வராஜின் உடலை சட்ட்குமாறு அவரது குடும்பத்தினரை வற்புறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் திரு. செல்வராஜின் கொலை சம்பவம் நடந்திருக்காது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சட்டவிரோத மது விற்பனை மற்றும் கொலை சம்பவங்களுக்குக் காரணமான ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைவர் மீதும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவலர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்றும் தனது அறிக்கையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.
Previous articleபள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்திற்கு!! இதை செய்தால் லைசென்ஸ் தற்காலிக ரத்து!!
Next articleபட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!!