திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

0
162

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் திடீரென விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்கள் செல்ல வேண்டிய காரணத்தினால் அந்த பொதுக்குழு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது நவம்பர் 10ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், இந்த பொதுக்குழு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 10ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளும் திமுக கூட்டணியின் வசம் இருந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகள் தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளது

கடந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக கூட்டணி, ஒருசில மாத இடைவெளியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது எப்படி? என்பது குறித்து இந்த பொதுக்குழுவில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது

மேலும் இந்த இரு தொகுதிகளில் இடைத்தேர்தலில் திமுக நிர்வாகிகள் சிலர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றுக், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இந்த பொதுக்குழுவில் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது

அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Previous articleபட்டேல் 144-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு
Next articleஉலகின் கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் 216 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று