திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா??

Photo of author

By Preethi

திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா??

திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் .இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர் அதில் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது:

அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அதிமுக அரசை அடிமை அரசு என, விமர்சனம் செய்தார். ஆனால் காவிரி பிரச்சினைக்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கினர்கள். இதைத் தொடர்ந்து மத்திய அரசை கோரிக்கை விடுத்து காவிரி ஆணையத்தை பெற்றுத்தந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வரியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சகவிதமும் டீசலுக்கு 24.08சகவீதமும் விதிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.27.75 டீசலுக்கு 20.35 கிடைக்கிறது.

திமுக வின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து 75 நாட்களாகயும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் திமுக தயக்கம் காட்டுவது ஏனென்று கேள்வி எழுப்பினார்? கொரோனா தடுப்பூசிக்கான வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆர் பி உதயகுமார் கூறினார்.