அதிமுகவிடம் பம்மிய திமுக! கெத்து காட்டும் ஆளும் தரப்பினர்!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்து ஆரம்பத்திலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளுநரிடம் மாநில அரசு அடங்கிப் போய்விட்டது என்று விமர்சனம் செய்து வந்தனர்.

ஆனாலும் முதல்வர் இட ஒதுக்கீடு அரசாணை அதிரடியாக வெளியிட்டார். இது மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல் ஆகிவிட்டது வேறு வழியில்லாமல் ஆளுநரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி விட்டார்.

இதனை முதல்வருடைய ராஜதந்திரம் என்று அவரை பாராட்டும் விதமாக சமூக வலைதளங்களில் அதிமுகவினர் தெரிவித்து வருகின்றார்கள்.

எப்போதும் ஆளுங்கட்சிக்கு பதிலடி தரும் திமுகவினர் இப்போது பதில் கூற முடியாமல் பம்மியிருக்கிறார்கள்.

தமிழக அரசின் மீது ஆளுநர் கோபப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆளுநரை நேரில் சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இது அவருடைய சாணக்கிய தனத்தை வெளிப்படுத்துகிறது, என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல எதிர்க்கட்சியினர் தினமும் ஒரு அறிக்கை, சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து அதிமுக அரசின் மீது குற்றச்சாட்டு, இப்படியே இருந்தால் ஆட்சி அரியணையில் ஏறி விடலாம். என்று பகல் கனவு காண்பதாகவும் சமூக வலைதள ஆசிகள் கிண்டலடித்து வருகிறார்கள்.

சென்னை மேயராக இருந்தபோது இருந்த வேகம் கூட ஸ்டாலினிடம், இப்போது கிடையாது என்று தெரிவிக்கிறார்கள் இதன் காரணமாக ஸ்டாலினின் நிலை நாளுக்கு நாள் மெலிதடைந்து கொண்டே வருகின்றது அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டே இருக்கிறது என்றுதான் கூறுகிறார்கள்.

Leave a Comment