சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!!
திமுக ஆட்சியை பிடிப்பதற்காக சட்டமன்ற தேர்தலின் போது 100க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்ததோடு தற்போது வரை பாதிக்கும் மேல் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றாமலே நிலுவையில் உள்ளது.
இவ்வாறு மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை எத்தனை நாட்கள் நிறைவேற்றாமல் இருக்கப் போகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை அது எப்பொழுதிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் என்று எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
திமுக மற்றும் அதன் நிர்வாகிகளிடம் இதனை பற்றி கேட்டால் இப்பொழுது அப்பொழுது என்று மழுப்பும் பதில் மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது.அந்த வகையில் தற்பொழுது பொங்கலுக்கு ரூ 1000 ரூபாய் இலவச வேட்டி சேலை மட்டும் கொடுத்துவிட்டு ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி தங்களை தாங்களே பெருமை பேசி வருகின்றனர்.
இந்த போஸ்டரில் திமுக ஆட்சிக்கு வந்து, கூறிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதை அடுத்து மக்கள் அதனை கண்டு கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.
இந்த போஸ்டர்களை போட்டோவாக எடுத்து பலர் தங்களது சமூக வலைத்தளத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் செய்பவர் என்றால் குடும்ப தலைவிகளுக்கான மாதந்தோறும் 1000 வழங்கும் வாக்குறுதியானது என்ன ஆச்சு?? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீப காலமாக இந்த பேச்சு ஏதும் எடுக்காத இருந்த நிலையில், சொந்த காசுலேயே சூனியம் வைப்பது போல தற்போது போஸ்டர் ஒட்டி அதன் மூலம் இவர்களையே கேள்வி எழுப்பும் நிலை வந்து விட்டது.இதுகுறித்து நெட்டிசன்ஸும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.