சொன்னீர்களே செய்தீர்களா? திமுகவின் முகத் தோலை உறித்த முன்னாள் அமைச்சர்!

0
172

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் கையில் எடுத்த முதல் அசைன்மென்ட் என்னவென்றால் அதிமுகவின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆயுதத்தை தான். அப்படி அதற்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களிடம் இருந்து தான்.

அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கே சி வீரமணி, உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடுத்தடுத்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டது தமிழக அரசு.

அதிலும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களை கட்டடம் கட்டுவதற்காக தான் இப்படி ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது ஏனென்றால், கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் திமுகவால் ஒரு கற்களை கூட அசைத்துப் பார்க்க முடிய வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க இந்த நடவடிக்கையின் மூலம் அதிமுகவை கொங்கு மண்டலத்தில் பலவீனப் படுத்தி விடலாம் என்பதே முதல்வரின் திட்டமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 1.5 சதவீத வாக்குகளில் தான் நாம் ஆட்சியை இழந்து இருக்கின்றோம். மக்கள் நமக்குத்தான் மறுபடியும் வாய்ப்பளிக்க காத்திருந்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி விமர்சனம் செய்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளருக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் அதிமுகவின் கொறடாவான வேலுமணி தலைமையில் நடந்தது முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம் எஸ் எம் ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி ஆலோசனை கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் உரையாற்றிய அவர், ஐந்து வருடங்களில் இரண்டு முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு என்று பெருமிதம் கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 1.5 சதவீத வாக்குகளில் தான் என நாம் அறிந்திருக்கின்றோம். பொதுமக்கள் நமக்குத்தான் மறுபடியும் வாய்ப்பு அளிக்க இருந்தார்கள் என தெரிவித்திருக்கிறார்.

ஆனால் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பொது மக்களை ஏமாற்றி விட்டார்கள் 525 இற்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து திமுக வெற்றி பெற்றது. நீட் தேர்வு ரத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற எந்த விதமான வாக்குறுதிகளையும் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று வேலுமணி விமர்சனம் செய்திருக்கிறார்.

Previous articleதீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை! தூக்கியடிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்!
Next articleமெகா தடுப்பூசி முகாம்கள்! முடிவை மாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர்!